சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடக்கம்: பரபரப்பு தகவல்
பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு இன்று தொடங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இரண்டு கட்டங்களாக இந்த சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் இம்மாத இறுதிக்குள் இந்த கணக்கெடுப்பு பணி முடிந்துவிடும் என்றும் பீகார் மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்களை முறையாக செயல்படுத்த வேண்டும் என்பதற்காக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த போவதாக பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்த நிலையில் சமீபத்தில் பீகார் மாநில அரசு இந்த கணக்கெடுப்பு குறித்து உறுதியான தகவலை தெரிவித்து என்பது குறிப்பிடத்தக்கது
தமிழகத்திலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாமக உள்ளிட்ட ஒரு சில காட்சிகள் வேண்டுகோள் விடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.