உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் 5வது சுற்றில் உலகின் மேக்னஸ் கார்ல்சன் (நார்வே), நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை நேற்று வீழ்த்தினார். ஆனந்த் (இந்தியா) – கார்ல்சன் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி (12 சுற்று) சென்னையில் நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் 4 சுற்று ஆட்டங்களும் டிராவில் முடிந்த நிலையில், நேற்று இரு வீரர்களும் 5வது சுற்றில் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், 58 நகர்த்துதல்களின் முடிவில் கார்ல்சன் போராடி வென்றார். 5 சுற்றுகளின் முடிவில் கார்ல்சன் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை வகிக்க 6வது சுற்று ஆட்டம் இன்று நடக்கிறது.

Leave a Reply