shadow

சாலையில் இருந்து வானில் பறந்து 2வது  மாடி வீட்டில் சிக்கிய கார்

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாநிலத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலையின் மத்தியில் உள்ள தடுப்பில் பயங்கர வேகத்துடன் மோதி, விண்ணில் பறந்து 2வது மாடியில் உள்ள வீட்டிற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் தென் பகுதியில் உள்ள சாண்ட்டா அனா பகுதி சாலை வழியாக நேற்று அதிகாலை சுமார் 5.30 மணியளவில் படுவேகமாக வந்த ஒரு வெள்ளைநிற சொகுசு கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின்மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் சுமார் இருபது அடி உயரத்துக்கு வானில் பறந்து எகிறிய கார், பக்கவாட்டில் இருந்த ஒரு கட்டிடத்தின் மாடி ஜன்னலுக்குள் பாய்ந்து, சொறுகி நின்றது.

பல் டாக்டர் ஒருவருக்கு சொந்தமான கிளினிக்கில் நோயாளிகள் சம்பந்தப்பட்ட கோப்புகளை சேமித்து வைத்திருக்கும் அறைக்குள் முன்பகுதி புகுந்த நிலையில் பின்பக்கத்தின் பெரும்பகுதி அந்தரத்தில் தொங்கியபடி ஒரு கார் நிற்கும் காட்சியை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

Leave a Reply