ஃபேஸ்புக்கில் இணைந்தார் கேப்டன் விஜயகாந்த்
கோலிவுட் திரையுலகில் புரட்சிக்கலைஞர் என்ற பெயரில் பல வெற்றி படங்களை கொடுத்தவரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் இன்று முதல் உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார். இது அவருடைய அதிகாரபூர்வமான ஃபேஸ்புக் பக்கம் என கட்சித்தலைமை அறிவித்துள்ளது.
இதுவரை எந்த சமூக வலைத்தளங்களிலும் சேராமல் இருந்த கேப்டன் விஜயகாந்த் இன்று முதல் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார். தனது கருத்துக்களையும், கட்சியின் நிகழ்வுகளையும் உடனுக்குடன் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே தான் ஃபேஸ்புக்கில் இணைந்திருப்பதாக கூறியுள்ள விஜயகாந்த், இன்று மெட்ரோ ரயிலில் பயணம் செய்தது குறித்த தகவல்களையும் உடனுக்குடன் பகிர்ந்து அனைவரையும் அசத்தியுள்ளார்.
இன்று காலை அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட கேப்டனின் ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஃபேஸ்புக் பயனாளிகளிடம் இருந்து மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சிலமணி நேரங்களில் 600க்கும் மேற்பட்டோர் இந்த பக்கத்தை லைக் செய்துள்ளனர். இன்னும் ஏராளமான லைக்குகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்பவர்கள் https://www.facebook.com/VijayakantDMDKParty என்ற லிங்க்கை க்ளிக் செய்து லைக் செய்து கொள்ளலாம்.