shadow

புதிய அணை கட்டிக்கொள்ளுங்கள். தண்ணீர் கிடையாது. கர்நாட சட்ட அமைச்சர் திட்டவட்டம்

5காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி நேற்று விவசாயிகள் சங்கள் மறியல் நடத்திய நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பே இல்லை என கர்நாடக முதல்வர் சித்தராமையா ஏற்கனே கூரியுள்ளார். இந்நிலையில் தமிழகம் ஒகேனக்கல்லில் புதிய அணை கட்டிக்கொள்ள வேண்டும் என்றும், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட முடியாது என்றும் கர்நாடக சட்ட மந்திரி ஜெயச்சந்திரா திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால் தமிழக விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று பெங்களூரில் பேட்டியளித்த கர்நாடக சட்ட மந்திரி ஜெயச்சந்திரா, “மிழ்நாட்டில் உள்ள அணைகளில் அதிகமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. ஆனாலும் தமிழகத்தினர் சம்பா பயிர் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுமாறு கேட்கிறார்கள். நமக்கு இங்கு குடிநீருக்கே தண்ணீர் இல்லை. எங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி இருக்கிறோம். தண்ணீர் திறந்து விட இயலாது என்பது குறித்து 10 தடவை கூறிவிட்டோம்.

ஆனால் தமிழகத்தினர் முழு அடைப்பு போராட்டம் மூலம் தந்திரம் செய்கிறார்கள். இந்த தந்திரம் பலிக்காது. தமிழகத்தில் போராட்டம் நடத்தினாலும் காவிரியில் தண்ணீர் விட முடியாது.

சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகத்தின் நிலை குறித்து தெளிவாக எடுத்து கூறுவோம். மழை சரியாக பெய்யாத சூழ்நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் பேச்சுக்கே இடம் இல்லை. நாங்கள் அணைகளை கட்டி இருப்பது தமிழகத்திற்கு தண்ணீர் விடுவதற்காக அல்ல. கர்நாடகத்தில் பருவமழை காலம் முடிந்துவிட்டது.

தமிழ்நாட்டில் இப்போது பருவமழை பெய்யும் காலம் தொடங்க உள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தண்ணீர் திறந்து விடுமாறு கேட்பதை விட்டு விட்டு புதிய அணைகளை கட்டிக்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒகேனக்கல்லில் தமிழ்நாடு புதிய அணை கட்டிக்கொள்ள வேண்டும்.

எங்கள் அணைகள் மீது தமிழகம் கண் வைக்கக்கூடாது. நாங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் விட்டுள்ளோம். இதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாங்கள் அணைகளை கட்டி இருப்பது தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக என்று தமிழகம் கருதக்கூடாது. தமிழகத்தில் நிலவும் நீர் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply