காதலியை கொலை செய்து மூளையை வறுத்து சாப்பிட்ட கொடூர காதலன்

காதலியை கொலை செய்து மூளையை வறுத்து சாப்பிட்ட கொடூர காதலன்

ரஷ்யாவில் உள்ள ஒரு இளைஞர் காதலியை கொலை செய்து அவரது மூளையை தனியாக எடுத்து வறுத்து சாப்பிட்டதாக கூறப்படும்க் கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் டிமிரிட்டி லிசின் என்ற 21 வயது இளைஞர் ஒலாகா புடுனோவா என்ற 45 வயது பெண்ணை காதலித்தார். சீரியல் கில்லர்கள் குறித்து அதிக ஆர்வமுடைய டிமிரிட்டி லிசன், மனிதர்களை கொலை செய்து, உடலை தின்னும் சடங்குகள் குறித்தும் அதிகமாக கூகுளில் அடிக்கடி தேடியதாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவ தினத்தன்று தனது காதலியின் வீட்டுக்கு சென்ற டிமிரிட்டி, மது பாட்டிலால் அவளது தலையில் கொடூரமாக தாக்கி அவரை கொலை செய்துஅ தன்பின்னர் காதலியின் மூளையை தனியாக எடுத்து வறுத்து சாப்பிட்டுள்ளதாக தெரிகிறாது.

இதையடுத்து, ஒலாகா புடுனோவாவின் கொலை தொடர்பாக விசாரித்த காவல்துறையினர் சைக்கோ கொலைகாரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தனது காதலியை கொடூரமாக கொலை செய்து மூளையை வறுத்து தின்ற சைக்கோ கில்லர் தற்போது ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.