shadow

ஜெயலலிதா, கருணாநிதி வேட்புமனுக்கள் ஏற்பு. தள்ளுபடி செய்யப்பட்ட மனுக்கள் விபரம்.

electionதமிழ்நாடு சட்டமன்றத்திற்கு வரும் மே 16ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாமக, மக்கள் நலக்கூட்டணி, நாம் தமிழர், பாஜக ஆகிய அணிகள் போட்டியிடுகின்றன. கடந்த சில நாட்களாக அரசியல் கட்சி தலைவர்கள் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த சில நாட்களாக தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வந்தனர். இந்நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்று மாலையுடன் முடிவசைந்த நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை இன்று தொடங்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 6,319 ஆண்கள், 787 பெண்கள், 3 திருநங்கைகள் என 7,109 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில்  வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. 2 தொகுதிகளுக்கு ஒரு பொது பார்வையாளர் தலைமையில் இந்த பரிசீலனை நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேட்புமனு பரிசீலனை முழுவதும் வீடியோ மூலம் தேர்தல் ஆணையம் கண்காணிக்கிறது.

இந்நிலையில் சென்னை ஆர்.கே. நகரில் போட்டியிடும் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், அதேபோல் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதியின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டதாகவும், தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் யார் யாருடைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் இன்று மாலை தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை மறுநாள் கடைசி தினம் என்றும் அன்றைய தினம் மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply