shadow

பிளாஸ்டிக் பாட்டிலில் படகு: மாணவர்கள் வியத்தகு முயற்சி

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளினால் சுற்றுச்சுழலுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டு வருவதாக விஞ்ஞானிகள் எச்சரித்து வரும் நிலையில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்த முடியும் என்பதை கேமரூன் மாணவர்கள் நிரூபித்துள்ளனர்.

பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை குப்பையில் இருந்து சேகரித்த மீனவர்கள் அவற்றை வலைகள் மூலம் ஒன்றிணைத்து பிளாஸ்டிக் படகுகளை செய்துள்ளனர். இவ்வகை பிளாஸ்டிக் படகுகள் எந்த காரணத்தை முன்னிட்டும் கடலில் மூழ்குவதில்லை

முதலில் மீனவர்கள் பிளாஸ்டிக் படகுகள் என்றதும் நகைச்சுவையாக சிரித்தனர். ஆனால் கடலில் சென்று பார்த்த அனுபவத்திற்கு பின்னர் இந்த படகுகள் தான் உலகிலேயே சிறந்த படகு என்பதை புரிந்து கொண்டனர். இவ்வாறு பிளாஸ்டிக் பாட்டில்களால் படகு செய்வது சுற்றுச்சுழலை காப்பாற்றியது மட்டுமின்றி உபயோகமான பொருள் ஒன்றையும் செய்த அந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

 

Leave a Reply