shadow

கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் திடீர் சோதனை: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் சோதனைகள் நடத்த அந்நாட்டு உயர் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலின்போது டிரம்பை ஆதரிக்கும் வகையில் இங்கிலாந்து நாட்டில் உள்ள கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் பேஸ்புக் பயனர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் பேஸ்புக் நிறுவனத்தின் மீதான நம்பத்தன்மை குறைந்து அதன் பங்குமதிப்பு அதள பாதாளத்திற்கு சென்றது.

இந்தியாவிலும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தனது கைவரிசையை காட்டினால் மத்திய அரசு சகிக்காது என்று சமீபத்தில் மத்திய மந்திரி ரவிசங்கர் பிர்சாத் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டின் உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனத்தில் சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்ற உயர் நீதிமன்றம் அங்கு சோதனை நடத்த வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது. இதையடுத்து, அங்கு சென்று சோதனை நடத்தினோம் என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply