கலிபோர்னியாவின் அடுத்த ஆளுனர் இந்தியரா?

அமெரிக்காவுக்கு செல்லும் இந்தியர்கள் பொருளாதரத்தில் மட்டும் முன்னேறவில்லை. அரசியலிலும் முன்னேறி வருகின்றனர். அதிபர் ஒபாமாவின் நன்மதிப்பையும் பலர் பெற்றுள்ளனர். இந்நிலையில் கலிபோர்னியா ஆளுனர் தேர்தலில் இந்தியர் ஒருவர் போட்டியிடுகிறார். அவருக்கு வெற்றி வாய்ப்பு சிறப்பாக இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட நீல் துஷ்கர் கேஷ்கரி தான் அந்த இந்திய வேட்பாளர். இவர் தற்போதுள்ள மேயரை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். இவர் குடியரசு கட்சியை சேர்ந்த வேட்பாளராக அங்கு போட்டியிடுகிறார்.

இவருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்ததை நம்பவே முடியவில்லை என்று இவருடைய பெற்றோர்கள் கூறுகின்றனர். கலிபோர்னியாவில் உள்ள இந்தியர்களின் வாக்குகளை மட்டுமின்றி இதர ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வந்தவர்களின் வாக்குகளை கவர கேஷ்கரி முடிவு செய்துள்ளார். அதற்கான பணிகளை இப்பொழுதே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

 

Leave a Reply