திருவனந்தபுரத்திற்கு அருகே உள்ள பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட கேக்கில் பல்லி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ப்ளம் கேக்கை சாப்பிட்ட ஒரு குழந்தை உட்பட மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெய்யாற்றின்கரையில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்யப்பட்ட கேக்கில் இறந்த நிலையில் பல்லி இருந்தது.
இந்த கேக்கை வாங்கி சாப்பிட்ட ஷமீலா, அக்ஹிலா ஆகிய பெண்களும் ஹிபா மரியம் என்னும் 7 மாத குழந்தையும் உடல் நலக்கோளாறு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி, நெய்யாற்றின்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கேக்கை விற்பனை செய்த கடையை சோதனை செய்த போலீசார், உணவு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் சென்று மீண்டும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply