shadow

`வெளிநாடுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் மத்திய அரசின் அதிரடி மசோதா

வங்கிகளில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாதது உள்பட பல்வேறு பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு அதன் பின்னர் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இப்படிப்பட்ட நேரத்தில் தப்பி சென்றவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் வகையில் புதிய சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ஆலோசனை செய்ய நேற்றுபிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பொருளாதாரக் குற்றங்களில் ஈடுபட்டு, வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வோரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யும் சட்ட மசோதாவுக்கு அமைச்சரை ஒப்புதல் அளித்தது.

மேலும் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தில் இருந்து மாறுபட்டதாக இந்தச் சட்டம் இருக்கும் என்றும், ரூ.100 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளவர்கள் மீது இந்தச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்து, அவர்களது மொத்த சொத்துகளையும் பறிமுதல் செய்யப்படும் என்றும் இந்த கூட்டத்தில் முடிவு செய்யபப்ட்டது.

சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தடுப்புச் சட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவரின் அனைத்துச் சொத்துகளையும் பறிமுதல் செய்ய முடியாது. இந்தச் சட்டம் மார்ச் 5-ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

Leave a Reply