கொரோனா வைரஸ் எதிரொலி: சிஏஏ போராட்டம் 31 நாட்களுக்கு ஒத்திவைப்பு

கொரோனா வைரஸ் எதிரொலி: சிஏஏ போராட்டம் 31 நாட்களுக்கு ஒத்திவைப்பு

சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ அரசியல் சட்டத்தை எதிர்த்து இஸ்லாமிய பெருமக்கள் போராட்டம் நடத்தி வருவது தெரிந்ததே

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஆங்காங்கே இந்த போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் சேலத்திலும் கடந்த சில நாட்களாக சிஏஏ அரசியல் சட்டத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டம் 31 நாட்களுக்கு ஒத்தி வைக்கப்படுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

ஒரே இடத்தில் பலர் கூடினால் கொரோனா வைரஸ் அதிகமாக தாக்கும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுவதால் இந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Leave a Reply