சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: பரபரப்பு தகவல்

சென்னையில் பேருந்துகள் திடீர் நிறுத்தம்: பரபரப்பு தகவல்

இன்று மாலை 6 மணி முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் இருந்து தொலை தூரங்களுக்கு செல்லும் பேருந்துகள் சற்று முன் நிறுத்தப்பட்டது

இன்று மாலை 6 மணிக்குள் எந்தெந்த பகுதிக்கு பேருந்துகள் செல்ல முடியுமோ அந்த பகுதி பேருந்து மட்டும் அனுமதிக்கப்பட்டதாகவும் மற்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 6 மணிக்கு மேல் போக்குவரத்து முற்றிலும் தடைபடும் என்பது இதன்மூலம் உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை உத்தரவை கடுமையாக மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் தற்போது தொலைதூர பேருந்துகள் பொருத்தப்பட்டுள்ளதால் வெளி மாவட்ட மக்கள் இனி சென்னையில் இருந்து வெளியேற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply