பேருந்து கட்டணங்களை அண்டை மாநிலங்களோடு ஓபிஎஸ் ஒப்பிடுவது சரியா?

பேருந்து கட்டணங்களை அண்டை மாநிலங்களோடு ஒப்பிடுவது சரியா?

ஒவ்வொரு முறையும் பேருந்து கட்டணத்தை உயர்த்தும்போது தமிழக அரசு கொடுக்கும் விளக்கத்தில் தவறாது இடம்பெறும் வாசகம், அண்டை மாநிலத்தை விட தமிழகத்தில் பஸ்கட்டணம் குறைவு என்பதுதான். ஆனால் அண்டை மாநிலத்தில் உள்ளது போல் தமிழகத்தில் பேருந்துகளின் தரம் உள்ளதா? பேரிச்சம்பழத்துக்கு போடும் பேருந்துகளை வைத்து கொண்டு அண்டை மாநிலத்தின் கட்டணத்தை ஒப்பிடுவது தவறு என்று பொதுமக்கள் கூறி வருகின்றனர்.,

எனவே இன்று காலை அண்டை மாநிலங்களைவிட பேருந்து கட்டணம் குறைவுதான் என்று விளக்கம் கூறிய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு பேருந்து பயணிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் இன்னும் ஒருநாள் அல்லது இரண்டு நாள் பொதுமக்கள் புலம்புவார்கள், அதன் பின்னர் மறந்துவிடுவார்கள் என்ற மக்களின் பலவீனத்தை அரசியல்வாதிகள் புரிந்து வைத்துள்ளனர் என்பதுதான் உண்மை.

Leave a Reply