அதிரடி காட்டும் பி.எஸ்.என்.எல்: மார்ச் 1 முதல் புதிய பிளான்

அதிரடி காட்டும் பி.எஸ்.என்.எல்: மார்ச் 1 முதல் புதிய பிளான்

ஜியோ நிறுவனத்தின் வருகைக்கு பின்னர் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களுக்கு இடையே தனியார் நிறுவனங்களுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனமும் புதிய பிளான்களை அறிமுகம் செய்து தனது வாடிக்கையாளர்களை அசத்தி வருகிறது.

இந்த நிலையில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் ரூ.399 பிளானில், பிற நிறுவன பிளான்களை விட கூடுதல் டேட்டா வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.399 பிளானில் 50% அதிக டேட்டா கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதே விலையில் ஏர்டெல், வோடாபோன், ஐடியா போன்ற நிறுவனங்களும் பிளான்களை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.என்.எல் ரூ.399 பிளானில் வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், பில்லிங் சுழற்சிக்கு 30ஜிபி டேட்டா அளிக்கப்படுகிறது. ஒருமாத காலத்திற்கு பிளான் வசதிகள் செல்லுபடியாகும் என்றும், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.