420 ஜிபி இலவசம்: பி.எஸ்.என்.எல் அதிரடி சலுகை

பி.எஸ்.என்.எல். நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2 ஜி.பி. டேட்டா என 210 நாட்களுக்கு மொத்தம் 420 ஜிபி இலவசமாக வழங்கப்படவிருப்பதாக அறிவித்துள்ளது

இந்த புதிய சலுகையின்படி ரூ.998க்கு ரீசார்ஜ் செய்தால் தினசரி 2 ஜிபி டேட்டாவுடன், பிரத்யேக ரிங்பேக் டோன் இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்று எவ்வித பலன்களும் வழங்கப்படவில்லை. இந்த சலுகையில் தினசரி டேட்டா அளவு தீர்ந்ததும் டேட்டா வேகம் 80Kbps ஆக குறைக்கப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ. 997க்கு ரீசார்ஜ் செய்தால் தினமும் 3ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், டேட்டா மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ். 180 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஆனால் இந்த சலுகை 180 நாட்களுக்கு மட்டும் என்பதும் தற்போது 210 நாட்களுக்கு வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *