ரயிலில் சென்று கொண்டிருந்த 9 ராணுவ வீரர்கள் திடீர் மாயம்: எங்கே சென்றார்கள்?

ரயிலில் சென்று கொண்டிருந்த 9 ராணுவ வீரர்கள் திடீர் மாயம்: எங்கே சென்றார்கள்?

மேற்கு வங்க மாநிலத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா பகுதிக்கு ராணுவ சிறப்பு ரெயிலில் மொத்தம் 83 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சென்று கொண்டிருந்த நிலையில் அந்த ரயில் முகல்சராய் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அங்கு ராணுவ வீரர்களை எண்ணும் பணி நடைபெற்றபோது 83 பேரில் 9 ராணுவ வீரர்கள் மாயமாகியது தெரிய வந்தததால் பெரும் பதட்டம் ஏற்பட்டது.

இவர்கள் அனைவரும் பர்தமன் மற்றும் தன்பாத் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்த போது மாயமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதுதொடர்பாக ராணுவ கமாண்டர் முகல்சராய் ரெயில்வே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து, மாயமான பாதுகாப்பு வீரர்கள் மீது தலைமறைவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். மாயமானவர்கள் கடத்தப்பட்டார்களா? அல்லது ராணுவத்தில் இருந்து தப்பிச்செல்வதற்காக மாயமாகிவிட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply