shadow

மலிவு விலை மதுவுக்காக எல்லை கடந்த விளையாட்டு வீரர்கள் கைது

மலிவு விலை மதுகுடிக்க தமிழ்நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு செல்பவர்களை நாம் பார்த்துளோம். இதேபோன்று பிரிட்டிஷ் விளையாட்டு வீரர்கள் மலிவு விலை மதுவுக்காக பின்லாந்து எல்லையை தாண்டி ரஷ்யா செல்ல முயற்சித்தபோது கைது செய்யப்பட்டனர்.

ஐரோப்பிய கண்டத்தில் ஒரியண்டரிங் என்ற விளையாட்டு மிகவும் பிரபலம். வரைபடம் மற்றும் திசைக்காட்டும் கருவியை பயன்படுத்தி அறியாத இடங்களுக்கு வழிகண்டுபிடித்து சென்றடையும் இந்த விளையாட்டில் பிரிட்டிஷ நாட்டை சேர்ந்த ஒரு குழு சமீபத்தில் பின்லாந்து சென்றது.

விளையாட்டின் இடையே மதுகுடிக்க ஆசைப்பட்ட வீரர்கள் மலிவு விலை மது குடிக்க பின்லாந்து எல்லையை தாண்டி ரஷ்யாவுக்கு சென்றுள்ளனர். பின்லாந்து எல்லையில் காரை நிறுத்திவிட்டு நடந்தே ரஷியாவுக்குள் மது குடிக்க சென்றனர். ஆனால் கார் நிறுத்தப்பட்டிந்த இடத்தை கடந்து சென்ற ஃபின்லாந்து எல்லை ரோந்துப்படை அந்த காரை பார்த்து மதுகுடித்துவிட்டு திரும்பி வந்த அவர்களை கைது செய்துள்ளது.

இந்த நால்வரும் தங்களுடைய குற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சட்டத்திற்கு புறம்பாக இவர்கள் மேற்கொண்ட இன்பப்பயணத்திற்காக அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். அதன் பின்னர் இவர்கள் விடுதலை செய்யப்பட்டு, ஐக்கிய ராஜ்ஜியம் செல்ல அனுமதிக்கப்படுவர்.

Leave a Reply