44 வயதில் 444 கிலோ. உலகின் மிக அதிக உடல் எடை கொண்ட மனிதர் மரணம்.

fat man 2

உலகின் மிக அதிக எடையுடையவர் என்ற கின்னஸ் சாதனை ஏற்படுத்தியவர் மரணம் அடைந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. உலகின் மிக அதிக எடையை உடைய 44 வயது கெயித் மார்ட்டின் என்பவர் கடந்த சில காலமாக படுத்த படுக்கையுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும், சிகிச்சைக்கு பலனின்றி நேற்று மரணம் அடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறாது.

fat man
கெயித் மார்ட்டினின் தங்கை டினா, தனது சகோதரரின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளார். தினமும் நூற்றுக்கணக்கான பீட்சா, கூல் டிரிங்க்ஸ் ஆகியவைகளை சாப்பிட்டு வந்த கெயித் மார்ட்டினின் உடல் எடை 444 கிலோ ஆகும். 44 வயதில் 444 கிலோ எடையை அடைந்த இவர் பல மாதங்களாக படுத்த படுக்கையாகவே இருந்தார். 18 வயது வரை நார்மலான உடல் அமைப்பை பெற்றிருந்த இவர் அதன்பின்னர்தான் உணவுப்பழக்க வழக்கம் காரணமாக மிக அதிக உடல் எடையை பெற்றதாக அவரது தங்கை டினா கூறியுள்ளார்.

fat man 1  fat man 3

Leave a Reply