வெளிநாட்டு முதலீடுகளை பிரிட்டனுக்கு அதிகளவில் திரட்ட மைகிரேஷன் என்ற ஆலோசனைக்குழு பிரிட்டன் அரசுக்கு பல புதிய திட்டங்களை வழிவகுத்து கொடுத்துள்ளது. அதில் ஒன்றுதான் பிரிட்டனுக்கு நன்கொடை அளிப்பவர்களுக்கு விசாவில் சலுகை செய்வது என்பது.

இந்த குழுவின் தலைவரான சர் டேவிட் மெட்காஃப் என்பவர் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கையில், பிரிட்டன் நாட்டிற்கு அதிகளவில் வெளிநாட்டு முதலீடுகளை கொண்டு வர திட்டம் தீட்டி தருமாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சில திட்டங்களை அரசுக்கு முன்வைத்துள்ளோம். அவற்றில் ஒன்றுதான் பிரிட்டன் நாட்டின் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் நபர்களுக்கு விசா கட்டுப்பாட்டில் இருந்து சலுகை வழங்குவது என்ற திட்டம்.

இந்த திட்டத்தின்படி 10 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் நன்கொடை அளிப்பவர்களுக்கு விசா வழங்குவதில் சில சலுகைகளை அறிவிக்கவேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளோம். ஆனால் இந்த திட்டத்தை பிரிட்டன் எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்துள்ளனர். பணத்தை கொடுத்து தீவிரவாதிகள் பிரிட்டனுக்குள் புகுந்து கொள்ளக்கூடிய அபாயம் இருக்கிறது என்று இந்த திட்டத்தை அவர்கள் குறைகூறி உள்ளனர்.

Leave a Reply