shadow

கொரோனாவில் இருந்து குணமான பிரிட்டன் இளவரசர்

உலகம் முழுவதும் மனித இனத்தையே அழிக்க மிக வேகமாக பரவி வரும் கொரோனா சமீபத்தில் பிரிட்டன் நாட்டின் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தி இங்கிலாந்து மக்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் தற்போது இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு அளிக்கப்பட்ட உயர்தர சிகிச்சை காரணமாக கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த பிரிட்டன் இளவரசர் சார்லஸ் குணமடைந்தார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதனால் பிரிட்டன் அரச குடும்பத்தினர் மற்றும் பிரிட்டன் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிரிட்டனில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வரும் நிலையில் தற்போது இளவரசர் குணமாகியுள்ளது ஒரு ஆறுதலான செய்தியாக பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *