தாலி கட்டுவதற்கு முன் மணமகனை அடித்து உதைத்த மணமகள் வீட்டார்

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் என்ற பகுதியில் முஜாமில் என்ற இளைஞருக்கு நேற்று திருமணம் நடக்கவிருந்த நிலையில் தாலி கட்டுவதற்கு முன் மணமகனை அடித்து உதைத்த மணமகள் வீட்டாரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் மணமகன், மணமகள் குடும்பத்தாரிடம் 10 லட்ச ரூபாய் வரதட்சணையாக கேட்டதாக தெரிகிறாது.

இதனால் சந்தேகம் அடைந்த மணமகள் வீட்டார் மணமகனின் பின்னணியை விசாரித்த போது அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்தது தெரிய வந்தது. இதனால் மணமகன் குடும்பத்தார் மணமகனை அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து மணமகள் வீட்டார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மணமகனிடம் விசாரணை செய்து வருகின்றனர்.