125 ஜோடிக்கு ஒரே நடத்தில் நடந்த திருமணத்தில் நிகழ்ந்த விபரீதம்!

125 ஜோடிக்கு ஒரே நடத்தில் நடந்த திருமணத்தில் நிகழ்ந்த விபரீதம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே இடத்தில் 125 ஜோடிகளுக்கு திருமணம் நடந்த நிலையில் அந்தத் திருமணத்தில் நடந்த அசம்பாவிதம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
மகாராஷ்டிர மாநிலத்தில் 125 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. இதற்காக பிரம்மாண்டமாக மணப் பந்தல் போடப்பட்டு அதில் மணமக்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு இருந்தனர்

இந்த நிலையில் அந்த பகுதியில் திடீரென சூறைக்காற்று வீசியதை அடுத்து மணப்பந்தல் சரிந்து விழுந்தது. இதில் ஒரு மணமகளும் திருமணத்திற்கு வந்த ஒரு சிலரும் காயம் அடைந்தனர்

இதனை அடுத்து காயமடைந்தவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது