‘வலிமை’ ரிலீஸ் ஒத்திவைப்பா? சற்றுமுன் போனிகபூர் டுவிட்!

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டு உள்ளதால் ‘வலிமை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால் வலிமை தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘வலிமை’ திரைப்படம் திட்டமிட்டபடி ஜனவரி 13-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவித்துள்ளார். இருப்பினும் ஜனவரி 10ஆம் தேதி தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் வெளியிடும் அறிவிப்பை பொறுத்தே இந்த படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என்று கூறப்படுகிறது..