shadow

இருமல் வந்ததால் உடைந்த மார்பெலும்புகள்: பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் திடீரென தொடர்ச்சியாக இருமியதால் அவருடைய மார்பு எலும்பு உடைதல் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

சீனாவை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் காரமான உணவை சாப்பிட்டதால் அவருக்கு தொடர்ச்சியாக சில நிமிடங்கள் இருமல் வந்தது

இந்த நிலையில் திடீரென அவரது மார்பு பகுதியில் எலும்புகள் நொறுங்கும் சத்தம் கேட்டதை அடுத்து அவர் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது மார்பு எலும்புகள் உடைந்து இருந்தது தெரியவந்தது

இதனையடுத்து அவருக்கு எலும்பு நிபுணர்கள் சிகிச்சை செய்தனர். அவர் சில மாதங்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.