முதல்வர் ஈபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: மர்ம ஆசாமி கைது

முக்கிய பிரபலங்களின் வீடுகளுக்கு அப்போது வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வீட்டிற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் ஒரு மர்ம நபரிடம் இருந்து வந்தது

இதனையடுத்து போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை செய்தபோது முதல்வர் வீட்டிற்கு தொலைபேசி மிரட்டல் விடுத்தவர் சிக்கந்தர் பாஷா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

இவர் ஏற்கனவே முதல் அமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைதானவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து மீண்டும் சிக்கந்தர் பாஷா, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது ஏன் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்றும் தீவிர பணியில் இருந்து வரும் நிலையில் அவரது வீட்டிற்கே வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply