விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்:

கோலிவுட்டில் பரபரப்பு

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நேற்று நள்ளிரவு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு மர்ம தொலைபேசி அழைப்பில் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறிவிட்டு அழைப்பு துண்டிக்கப்பட்டது

இதனையடுத்து காவல்துறையினர் விரைந்து நடிகர் விஜய்யின் சாலிகிராமம் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர் இந்த சோதனைகள் எந்தவிதமான வெடிகுண்டு சிக்கவில்லை. இதனை அடுத்து அது புரளி என்பது உறுதி செய்யப்பட்டது

இந்த நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் விழுப்புரத்தை சேர்ந்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிந்தால் அவரது குடும்பத்தினரிடம் எச்சரிக்கை செய்துவிட்டு போலீசார் திரும்பி உள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply