மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போர்க்கப்பலில் வெடிவிபத்து! 3 கடற்படையினர் பலி!

மும்பையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய போர் கப்பலில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 கடற்படையினர் பலியாகியுள்ளனர்.

மும்பையில் உள்ள கடற்படை தளத்தில் ஐஎன்எஸ் ரன்வீர் என்ற போர்க்கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த கப்பலில் நேற்றிரவு திடீரென வெடிவிபத்து நடந்தது.

இந்த வெடி விபத்தில் கடற்படை வீரர்கள் 3 பேர் உயிரிழந்ததாகவும் இதுகுறித்து தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது

இந்த வெடி விபத்து குறித்து கடற்படையினர் விசாரணை செய்யவுள்ளனர்.