போதை விருந்தில் பிரபல பாலிவுட் நடிகர் மகன் கைது!!

பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் போதை மருந்து விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

அந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்தப்பட்டது உறுதியானது விருந்தில் பங்கேற்ற 35 பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

இதில் பாலிவுட் நடிகர் சக்திகபூர் மகன் நடிகர் சித்தாந்த் உட்பட 5 பேர் போதை மருந்து உட்கொண்டிருந்தது உறுதியானது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.