நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் வெறிச்செயல். 4 பேர் பலி, 3 பெண்கள் கடத்தல்

நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் வெறிச்செயல். 4 பேர் பலி, 3 பெண்கள் கடத்தல்

bokoவளைகுடா நாடுகளில் ஐ.எஸ். தீவிரவாதிகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு கொண்டிருப்பது போல நைஜீரியா நாட்டில் போகோஹராம் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் கடந்த 15 ஆண்டுகளாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட நைஜீரியாவில் உள்ள சிபோக் நகரில் 276 பள்ளி மாணவிகளை கடத்தி சென்றனர். அவர்கள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று அதிகாலை இதே சிபோக் நகரின் அருகேயுள்ள கவுட்டுவா என்ற கிராமத்துக்குள் புகுந்த போகோஹரம் தீவிரவாதிகள் அந்த கிராமத்து மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிகளா சுட்டதில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 3 இளம்பெண்களையும் அவர்கள் தூக்கி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்துள்ள நைஜீரிய அரசு, இது ஒரு கோழைத்தனமான செயல் என்றும் அப்பாவி கிராம மக்களிடம் வீரத்தை காட்ட வேண்டாம் என்றும் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Leave a Reply