மருத்துவ கல்லூரி மாணவியுடன் 19 வயது வாலிபர் தூக்கில் தொங்கிய பரிதாபம்

மருத்துவ கல்லூரி மாணவியுடன் 19 வயது வாலிபர் தூக்கில் தொங்கிய பரிதாபம்

டெல்லியில் உள்ள ஓட்டல் அறை ஒன்றில் மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவரும் 19 வயது வாலிபர் ஒருவரும் தூக்கு போட்டு தொங்கிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் லேடி ஹார்டிங் மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு படித்து வருகிறார் ஒரு மாணவி (19). இவரது தந்தை ரோஹினி பகுதியில் உள்ள துணை ராணுவப் படையில் ஆப்பரேட்டராக வேலைபார்த்து வருகிறார். இந்த மாணவியுடன் இணைந்து ஜனக்பூரி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் (18) தனக்கு பயிற்சி வகுப்பு இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார். இருவரும் இணைந்து டெல்லியின் துவாராகாவில் உள்ள ஒரு ஹோட்டலில் ஆன்லைன் மூலமாக ரூம் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று பிற்பகல் 12.30 மணி வரை மட்டும் அவர்கள் ரூம் வாடைகைக்கு எடுத்திருந்த நிலையில், 3 மணி ஆகியும், அவர்கள் வராததால், ஹோட்டல் ஊழியர் அறையை தட்டியுள்ளார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. இதன் காரணமாக ஹோட்டல் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் ஃபேனில் பெட்சீட்டை கட்டி தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

அதன் பின்னர் இருவரது உடலையும் கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இருவரது தற்கொலை குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை காதல் பிரச்சனையாக கூட இருக்கலாம் என்று போலீசார் எண்ணுவதாக கூறப்படுகிறது. இந்த தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published.