shadow

பாபிசிம்ஹாவின் ‘கோ 2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

ko 2ஜிகர்தண்டா படத்திற்கு பின்னர் கோலிவுட்டின் முக்கிய நடிகராக மாறிவிட்ட நடிகர் பாபிசிம்ஹா, தற்போது அரை டஜனுக்கும் மேலான படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒரு படம் ‘கோ 2’.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா, கார்த்திகா நடித்த ‘கோ’ சூப்பர் ஹிட் ஆகிய செண்டிமெண்டில் அந்த படத்தை தயாரித்த எல்ரெட்குமார் இந்த படத்திற்கு ‘கோ 2’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்.

அரசியல் த்ரில் படமான இந்த படம் வரும் மே மாதம் 13ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. முதலில் இந்த படம் மே 6ஆம் தேதி சூர்யாவின் ’24’ படத்துடன் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் தற்போது தேர்தலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாபிசிம்ஹா, நிக்கி கல்ராணி ஆகிய இருவரும் பத்திரிகையாளர்களாக நடிக்கும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் அரசியல்வாதியாக நடித்துள்ளார். இந்த படத்தை சரத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply