புளுசட்டை மாறனின் திரைப்படத்தை பாஜக புரமோஷன் செய்யுமா?

கோலிவுட் திரையுலகில் தோல்வி அடைய வேண்டிய திரைப்படம், படுதோல்வி அடைய வேண்டிய திரைப்படங்களை எல்லாம் பாஜக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வெற்றி படமாக்கிய வரலாறு அவ்வப்போது நிகழ்வதுண்டு. விஜய்யின் மெர்சல் கூட இந்த பட்டியலில் உள்ள படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அனைத்து திரைப்படங்களையும் கழுவி கழுவி ஊற்றி விமர்சனம் செய்யும் புளுசட்டை மாறன் அவர்கள் ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அனேகமாக பாஜக கடும் எதிர்ப்பை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஏனெனில் புளுசட்டை மாறன் தான் இயக்கி வரும் படத்திற்கு ’ஆன்ட்டி இந்தியன்’ என்ற டைட்டிலை வைத்துள்ளாராம். ஆன்ட்டி இந்தியன் என்ற வார்த்தையை பாஜகவினர் அடிக்கடி பயன்படுத்துவதால் பாஜகவினர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது

அதுமட்டுமின்றி இந்த படத்தில் பாஜகவுக்கு எதிரான அதிரடியான வசனங்கள் மட்டும் காட்சிகள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் தங்களது எதிர்ப்பை காண்பித்து இந்த படத்திற்கு பாஜக இலவச புரமோஷன் செய்யும் என்று கூறப்படுகிறது

Leave a Reply