shadow

முதலமைச்சரை பதவியில் இருந்து இறக்கும்வரை ஓய மாட்டோம்: அமித்ஷா

மேற்குவங்க முதலமைச்சர் பதவியில் இருந்து இறக்கும் வரை ஓயமாட்டோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இன்று மேற்கு வங்க மாநிலம் சென்றார்

அங்கு ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசியபோது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை இறக்கும் வரை ஓய மாட்டோம் என்றும் அவர் கூறினார்

மேற்கு வங்கத்தில் தான் மிக அதிகபட்சமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு 115 ரூபாய் விற்பனையாகி வருவதாகவும் பாஜக ஆளும் மாநிலங்களில் 105 ரூபாய் மட்டுமே விற்பனையாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்