shadow

modi rahul kejriwal (1) copy

வரும் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணிக்கு 233 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிகு 119 இடங்களும் கிடைக்கும் என ஏபிபீ நியூஸ், ஏ.சி. நீல்சன் ஆகியவை இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு கூறுகிறது.

தமிழகத்தில் அதிமுக 21 இடங்களும், திமுக 10 இடங்களும், பாரதிய ஜனதா கூட்டணி 8 இடங்களும், காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெறும் என அந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.

அகில இந்திய அளவில் மோடி பிரதமர் ஆவதற்கு 54% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ராகுல்காந்திக்கு வெறும் 18 % மட்டுமே ஆதரவு உள்ளதாகவும் கூறும் கருத்துக்கணிப்பு, பிரதமர் ரேஸில் இருக்கும் மாயாவதி, முலாயம் சிங் , அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் ஜெயலலிதாவுக்கு 3% ஆதரவு மட்டுமே உள்ளதாக கூறியுள்ளது.

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், அந்த கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.

அதிக தொகுதிகள் அடங்கிய மாநிலங்களான உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்படுகிறது.

கருத்துக்கணிப்பின்படி மோடி அடுத்த பிரதமர் ஆவது உறுதியாகிறது.

Leave a Reply