கேவலமான ஓட்டு வங்கி அரசியல்: கனிமொழிக்கு பாஜக பதிலடி

குடியுரிமை சட்ட மசோதா சமீபத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் விரைவில் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்படவுள்ளது. மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பெரும்பான்மை இருப்பதால் இந்த சட்டம் நிச்சயம் நிறைவேறிவிடும் என்பது உறுதி

இந்த நிலையில் இந்த சட்டம் குறித்து கனிமொழி எம்பி தனது டுவிட்டரில், ‘குடியுரிமை சட்ட மசோதா 2019 இஸ்லாமியர்களுக்கு எதிரானது. திமு கழகம் என்றைக்கும் சிறுபான்மையினரை கைவிடாது. 10/12/2019 அன்று பாராளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் இம்மசோதா மீதான விவாதம் முடியும் வரை இருந்து, தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்தனர். நாங்கள் வெளிநடப்புச் செய்தோம் என்ற பொய்ப் பிரச்சாரம் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சற்றும் மனசாட்சி இல்லாமல் பொய்யுரைத்து இஸ்லாமிய சகோதரர்களிடம் பயத்தை உருவாக்கி கேவலமான ஓட்டுவங்கி அரசியல் செய்ய அறிவாலயத்தால் மட்டுமே முடியும். இந்த சட்டத்தில் இஸ்லாமியர்க்கு எதிராக ஒரு வார்த்தை நிரூபிக்க முடியுமா? போகிற போக்கில் கல்லெறிவதே இவர்தம் வாடிக்கை’ என கனிமொழிக்கு பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply