இத்தாலிய பிரதமருக்கு அறிவுரை கூறுங்கள்: ராகுல்காந்திக்கு பாஜக அதிரடி

சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவது குறித்து பேசி இந்தியாவின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் கொரோனா வைரஸ் பரவுவதில் இருந்து மக்களை எப்படி காப்பாற்றலாம் என்பது குறித்து தீவிர நடவடிக்கை எடுங்கள்’ என்றும் காங்கிரஸ் பிரமுகர் ராகுல்காந்தி, பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வைத்துள்ளார்.

இதற்கு அதிரடியாக பதில் அளித்துள்ள பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: உங்கள் இத்தாலிய குடும்பத்தினர் நலனில் அக்கறை கொள்ள இத்தாலிய பிரதமருக்கு அறிவுரை கூறுங்கள் ராகுல்காந்தி அவர்களே, அவர்களுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்

உங்கள் வழக்கமான கோமாளித்தனங்களை காட்ட இதுவல்ல நேரம். விஷகிருமிகளிடம் இருந்து பிரதமர் நரேந்திரமோடி உறுதியாக காப்பார் என்பது மக்களுக்கு தெரியும்’ என்று கூறியுள்ளது.

Leave a Reply