பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்!

தேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மற்றும் டில்லி பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் நபிகள் நாயகம் குறித்து தெரிவித்த கருத்து சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இவர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும்.

இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளைக் காயப்படுத்திய பாஜக மன்னிப்பு கோர வேண்டும் எனக் கூறினார்.