சமஸ்கிருத மொழி பேசினால் சர்க்கரை நோய் வராது: பாஜக எம்பியின் கண்டுபிடிப்பு

சமஸ்கிருத மொழியை தினசரி பேசிவந்தால் சர்க்கரை மற்றும் கொழுப்பு பிரச்சினைகள் வராது என்று பாஜக எம்.பி ஒருவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது.

பாஜக எம்.பியான கணேஷ் சிங் என்பவர், பாராளுமன்றத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழக மசோதா குறித்த விவாதத்தில் பேசியபோது, ‘இஸ்லாமிய மொழிகள் உள்ளிட்ட 97 சதவிகிதத்திற்கும் அதிகமான மொழிகள் சமஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்டே உருவானது என்றும், தினசரி சமஸ்கிருதம் பேசினால் கொழுப்பு குறைந்து நீரிழிவு நோய் தடுக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் இந்த கருத்து தான் கூறியது ஆல்ல என்றும், அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று இதனை தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். கணேஷ் சிங் எம்பியின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply