இத்தாலியில் இருந்து வந்த ராகுல்தான் இந்தியாவில் குரலோசை பரப்பினாரா? பாஜக எம்பி கேள்வி

இத்தாலியில் இருந்து வந்த ராகுல்தான் இந்தியாவில் குரலோசை பரப்பினாரா? பாஜக எம்பி கேள்வி

கடந்த ஆறு நாட்களுக்கு முன்னர் இத்தாலியிலிருந்து ராகுல் காந்தி இந்தியா திரும்பிய பின்னர் தான் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக பாஜக எம்பி ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பாஜகவைச் சேர்ந்த எம்பி ரமேஷ் பிதூரி என்பவர் நேற்று டெல்லியில் நடந்த வன்முறை பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவர் ’ராகுல் காந்தி அவர்கள் கடந்த ஆறு நாட்களுக்கு முன்புதான் இத்தாலியில் இருந்து இந்தியா வந்தார். அவர் விமான நிலையத்தில் மருத்துவ சோதனை செய்தாரா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும்

மேலும் இத்தாலியில் கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் நிலையில் கொரோனா வைரஸ் குறித்து முன்னெச்சரிக்கையாக அவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என்ற கேள்வி எழுப்பியய அவர், இந்தியாவில் கொரோனா வைரஸை பரப்புவதற்காகவே அவர் இத்தாலி சென்று வந்தாரா? என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply