மக்களவை சபாநாயகராக சுமித்ரா மகாஜன் போட்டியின்றி தேர்வு.

Sumitra_Mahajan_in_Parliament_36016வது நாடாளுமன்ற தலைவராக பாரதிய ஜனதா கட்சியின் சுமித்ரா மகாஜன் இன்று ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர்கள்  வாழ்த்துதெரிவித்தனர்.

ஒருமனதாக போட்டியின்றி மக்களவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுமித்ரா மகாஜன் இன்று தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

சபாநாயகர் தேர்தலுக்கு பாரதிய ஜனதா கட்சியின் சுமித்ரா மகாஜன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை. மேலும் அவரது பெயரை பிரதமர் நரேந்திர மோடி உட்பட 19 பேர் பரிந்துரை செய்தனர். அவருக்கு போட்டியாக வேறு யாரும் இல்லாத காரணத்தினால் அவர் ஒருமனதாக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். மீராகுமாருக்கு பின்னர் சபாநாயகர் பொறுப்பை ஏற்கும் இரண்டாவது பெண் ஆவார்.

வாஜ்பாய் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக பணிபுரிந்த சுமித்ரா மகாஜனுக்கு தற்போது 72 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply