shadow

குஜராத்தில் பாஜக ஆட்சி, இமாச்சல பிரதேசத்தில் இழுபறி

குஜராத், இமாச்சல பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கு முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.

இந்த நிலையில் இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 தொகுதிகளில் 32 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும் 33 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும் முன்னிலையில் உள்ளனர்.

குஜராத் மாநிலத்தில் பாஜக பாஜக 134 தொகுதிகளிலும் காங்கிரஸ் 28 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 12 தொகுதிகளிலும் மற்றவை 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது