shadow

மத்திய அமைச்சர் சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை. பிரபல நடிகர் குற்றச்சாட்டு

vengaiya-naiduஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக பலமுறை வாக்குறுதி கொடுத்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, இதுவரை அதை பெற்று தரவில்லை என்றும், ஆந்திராவை சேர்ந்தவராக இருந்தும் அவர் சொன்ன சொல்லை காப்பாற்றாதால் ஆந்திர மக்களை அவர் ஏமாற்றிவிட்டார் என்றும் பிரபல தெலுங்கு நடிகரும், ஜனசேனா கட்சியின் நிறுவனரும் நடிகருமான பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலளித்து பாஜக தேசிய செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது:-

எங்கள் கட்சியின் மூத்த தலைவரான வெங்கையா நாயுடுவை பற்றி பவன் கல்யாண் தெரிவித்துள்ள கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது ஆகும்.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது பற்றி பாரதீய ஜனதா ஆட்சியின் போது எதுவும் பேசப்படவில்லை. 14-வது நிதி கமிஷனின் அறிக்கை கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கிடம் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையின் சிபாரிசுகளை அப்போதைய மத்திய அரசு நிறைவேற்றவில்லை.

அந்த அறிக்கையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதற்கான அம்சங்கள் எதையும் அப்போதைய அரசு சேர்க்கவில்லை. அந்த அறிக்கையின் சிபாரிசுகளை பின்னர் ஆட்சிக்கு வந்த பாரதீய ஜனதா கூட்டணி அரசு நிறைவேற்றியது. மாநில பிரிவினையால் ஆந்திராவுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை சரிக்கட்ட அந்த மாநிலத்துக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும்.

இதுகுறித்து வெங்கையா நாயுடு விளக்கமளித்தபோது, ‘மாநில பிரிவினையால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் கோடிக்கும் அதிகமான திட்டங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது. மேலும் ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சிக்காக, நான் எப்போதும் பாடுபட்டு வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply