குஜராத் முதல்வர் கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த மதக்கலவரத்தை தடுக்க முடியாமல் ஆண்மையற்றவராக செயல்பட்டார் என்று விமர்சனம் செய்த மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷீத்துக்கு பாரதிய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த இந்து மற்றும் முஸ்லீம் மதக்கலவரத்தின் போது, அதை தடுக்க எதுவும் செய்ய முடியாதவராக, ஆண்மையற்றவராக இருந்தவர் எல்லம் பிரதமராக ஆசைப்படலாமா?” என்று நேற்று  பருக்காபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியின்போது மத்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆவேசமாக பேசினார். இந்த பேச்சுக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே மோடியை டீ விற்றவர் என்று விமர்சனம் செய்து வரும் காங்கிரஸார் தற்போது மிகவும் தரம் இறங்கி இதுபோன்ற அருவருக்கத்தக்க வகையில் மோடியை விமர்சனம் செய்வது வேதனை அளிப்பதாக குஜராத் மாநில அமைச்சர் ஜெய் நாராயண் வியாஸ் இன்று தெரிவித்துள்ளார்.

இதனிடையில் சல்மான் குர்ஷீத் இதுகுறித்து விளக்கம் அளிக்கையில் மதக்கலவரத்தை தடுக்க இயலாமல் செயலற்றவராக இருந்தார் என்று தான் விமர்சனம் செய்ததாகவும், ஊடகங்கள் அதை திரித்து செய்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Leave a Reply