திமுகவுக்கு போட்டியாக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பாஜக!

திமுகவுக்கு போட்டியாக ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பாஜக!

குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளைஞரணி செயலாளர் உதயநிதி தலைமையில் ஒரு பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது

இதனை அடுத்து நேற்று முன்தினம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்று இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது

இந்த நிலையில் திமுகவின் அடுத்தடுத்த போராட்டங்களுக்கு பதிலடி கொடுக்க குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுக வை கண்டித்து டிசம்பர் 20-ஆம் தேதி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாஜக பிரமுகர் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்

நாட்டிலிருந்து யாரையும் வெளியேற்றம் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என்றும் திமுகவை நம்பி மாணவர் சமுதாயம் களமிறங்க வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply