ஜெய்பீம் படத்திற்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலை: ஆச்சரிய தகவல்

சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பெரும்பாலானோர் ஆதரவு அளித்து வந்தாலும் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாஜக பிரமுகர்கள் பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் பாஜக தலைவர் அண்ணாமலை ஜெய்பீம் திரைப்படத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்

பாஜக தலைவர் அண்ணாமலை ஜெய்பீம் படம் குறித்து கூறிய போது ஜெய்பீம் அற்புதமான திரைப்படம் என்றும் அடித்தட்டு மக்களின் பிரச்சனையை அற்புதமாக எடுத்து சொல்லி இருக்கிறது என்றும் ஜெய்பீம் திரைப்படத்தை பாஜக வரவேற்கிறது என்றும் தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது