shadow

11 குற்றவாளிகள் விடுதலைக்கு எதிர்ப்பு: பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு

குஜராத் மாநிலத்தில் பில்கிஸ் பானு என்ற பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து அவரது குழந்தையை கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர்களும் நன்னடத்தை காரணமாக கடந்த சுதந்திர தினத்தில் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் 11 பேர் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.