சமீபத்தில் நடைபெற்று முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வெற்றி பெற்று 125 தொகுதிகளைப் பெற்றது என்பது தெரிந்ததே

இருப்பினும் பாஜக 74 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஆனாலும் அந்தக் கட்சியும் ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதீஷ் குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது என்றும் செய்திகள் வெளியானது

இந்த நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நிதிஷ்குமார் நாளை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் அந்தக் கூட்டத்தில்தான் முதலமைச்சர் யார் என்பது முடிவு செய்யப்படும் என்றும் நான் முதலமைச்சர் பதவியை கோரவில்லை என்றும் தெரிவித்துள்ளார் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் பீகாரின் அடுத்த முதல்வர் நிதிஷ்குமார் தான் என கூறியுள்ள நிலையில் நிதிஷ்குமார் தான் முதலமைச்சர் பதவியை கோரவில்லை என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply