shadow

கேள்வித்தாள் லீக் எதிரொலி: முக்கிய தேர்வு ரத்து

பீகார் மாநிலத்தில் கேள்வித்தாள் லீக் ஆனதால் முக்கிய தேர்வு ரத்து செய்யப்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பீகார் மாநிலத்தின் சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற இருந்த நிலையில் திடீரென கேள்வித்தாள் லீக் ஆகிவிட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவியது

இதுகுறித்து பீகார் மாநில தேர்வு துறை விசாரணை செய்தபோது கேள்வித்தாள் லீக் ஆனது உறுதிசெய்யப்பட்டது

இதனையடுத்து தேர்வை ரத்து செய்ய பீகார் மாநில தேர்வு துறை முடிவு செய்துள்ளது
மேலும் சைபர் கிரைம் போலீஸ் மூலம் கேள்வித்தாள் லீக் ஆனது எப்படி என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது